"பணிப்புறக்கணிப்பு நோக்கமல்ல; பேச்சுவார்த்தையே எமது ஆயுதம்!"

#SriLanka #Hospital #strike #Weapons #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
"பணிப்புறக்கணிப்பு நோக்கமல்ல; பேச்சுவார்த்தையே எமது ஆயுதம்!"

பணிப்புறக்கணிப்பு தமது நோக்கமல்ல எனவும் பேச்சுவார்த்தையே தமது ஆயுதம் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

சூரியன் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் இறுதி வழிமுறையாகவே பார்க்கப்படுகின்றன.

எப்போதுமே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சுக்கள் மற்றும் ஜனாதிபதியுடன் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதையே சங்கம் முதன்மைப்படுத்துகிறது.

சங்கத்தினால் முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளும் வெறும் உணர்ச்சிவசப்பட்ட கோரிக்கைகள் அல்ல. அவை அனைத்தும் அறிவியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அரசாங்கத்திடம் கையளிக்கப்படுகின்றன. 

இது அரசாங்கம் சரியான முடிவுகளை விரைவாக எடுக்க உதவும் என சங்கம் நம்புகிறது. மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்றாலே 'போராட்டக் காரர்கள்' அல்லது 'பணிப்புறக்கணிப்பு செய்பவர்கள்' என்ற ஒரு எதிர்மறையான பிம்பம் திட்டமிட்ட முறையில் மக்களிடையே பரப்பப்பட்டுள்ளது. 

அரசியல் ஆட்சியாளர்கள் அல்லது சில அதிகாரிகளால் இவ்வாறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. 

அமைச்சர்கள் அல்லது அரச தரப்பில் உள்ளவர்களின் 'அதிகார மமதை' காரணமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் போது மட்டுமே மருத்துவர்கள் கடினமான முடிவுகளை எடுக்கத் தள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!